கோவை: படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ள ரஜினியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், “தலைவா, தலைவா” என்று கூச்சலிடும் விடியோ வைரலாகி வருகிறது.
ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் கோவை வந்துள்ளார். இன்னும் இரண்டு வார காலத்திற்கு ஆனைகட்டி மற்றும் கேரள மாநில எல்லையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே ஆனைகட்டியில் படப்பிடிப்புத்தளத்தில் ரஜினியை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அவரை சூழ்ந்து கொண்டு “தலைவா.. கடவுளே…” என்று கூச்சலிட்டனர்.
தொடர்ந்து காரில் ரஜினி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.