கோவை: கோவையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காந்திபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.
அதில் 90 டெசிபல்-க்கு அதிகமாக ஒலி எழுப்பும் ஹார்ன்கள் பொருத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்படும் என்றும், தற்போது ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக விதிமீறல்களில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்கள் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.