Header Top Ad
Header Top Ad

விசைத்தறியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு; சட்டப்பேரவையில் அறிவிப்பு!

கோவை: விசைத்தறியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Lazy Placeholder

இதனிடையே 5 சோமனூர் பகுதியில் குடும்பத்துடன் அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அந்த வகையில், கோவை திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.

Advertisement
Lazy Placeholder

Recent News

Latest Articles