கோவை: படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ள ரஜினியைப் பார்த்து அவரது ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏந்தி ஆரத்தி எடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையை ஒட்டியுள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் நடைபெறுகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 10ம் தேதி விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரஜினி ஆனைகட்டி அருகே தங்கியுள்ள ரிசார்ட்டின் வெளியே தினமும் ரசிகர்கள் அவரைக் காணக் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஜினி தங்கியுள்ள ஹோட்டல் முன்பு நேற்றும் ரசிகர்கள் திரண்டனர். அப்போது படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு வந்த ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அதில் சில ரசிகர்கள், “தலைவா… தெய்வமே… வாழ வைக்கும் தெய்வமே…” என்று கோஷங்களை எழுப்பினர்.
அப்போது. அங்கிருந்த ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ரஜினிக்கு ஆரத்தி காண்பித்து கும்பிடு போட்டார். அவர்களைப் பார்த்து கையசைத்த ரஜினி ரிசார்ட்டுக்குள் சென்றார்.