வாய்த் தொல்லை, வயிறு உப்புசத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த தொகுப்பு உங்களுக்காகத் தான்.
வாயுத் தொல்லையால் பலருக்கு வயிறு வீக்கம், வயிற்று வலி, வயிற்று உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
இந்த வாயுத் தொல்லையிலிருந்து விடுபடுவதால் வயிறு சம்பந்தமான பல பிரச்சினைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

வாயு பிரச்சினையை விரட்ட சில இயற்கை மருத்துவம் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றி இந்த பதிவில் காணலாம்
ஓமம்
அரை டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து தினமும் குடித்து வர வாயுத் தொல்லை குறையும்.
சீரகம்

அகத்திணை சீர் செய்ய உதவுவதே சீரகம். சீரகத்தை வறுத்து தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். இது ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
பெருங்காயம்
வயிறு உப்புசம் மற்றும் வாயு தொல்லை இருக்கும்போது ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூளை சூடான தண்ணீரில் கலந்து குடித்து விடுங்கள் இது வாயுவை வெளியேற்றி உடனடி தீர்வு தரும்.
இஞ்சி
இஞ்சி ஒரு இயற்கை வாயு விரட்டியாகச் செயல்படுகிறது. இதை தினமும் எடுத்துக் கொள்வதனால் வாயு பிரச்சினையில் இருந்து தப்பலாம்.
சோம்பு
உணவு உண்டபின் ஒரு டீஸ்பூன் சோம்பை வாயில் போட்டு மெல்வதைப் பழக்கப்படுத்து வாயு தொல்லையிலிருந்து நம்மை விடுவிக்கும்.
ப்ரோபயோடிக் உணவுகள்
நாம் தினமும் உண்ணும் உணவில் நல்ல பாக்டீரியாக்கள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக தயிர், பழைய சாதம், இட்லி மாவு போன்றவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.
வெந்நீரும் எலுமிச்சையும்

வெதுவெதுப்பான தண்ணீர் உடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதனால் வாயு தொல்லையிலிருந்து விடுபடலாம். ஆனால், இதனை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது.
உணவு
நம் உடலுக்கு ஒவ்வாத வாயு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் அவசியமாகும். அடிக்கடி வாயு தொல்லையால் அவதிப்படுபவர், தான் உண்ணும் உணவில் கவனம் செலுத்துவது அவசியம்.
அதுபோல உணவு உண்ணும் போது நன்றாக மென்று உண்ணுதல் வேண்டும். பேசாமல் சாப்பிட்டுப் பழக வேண்டும். இது கூடுதல் காற்று உள்ளே போகாமல் தடுக்கும்.
அடிக்கடி மோர் குடிப்பதாலும், ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுவதாலும் கூட இந்த வாயு தொல்லையில் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.
இந்த முறைகளை எல்லாம் கடைபிடித்தும், இரண்டு மாதங்களுக்கு மேல் வாயுத் தொல்லை நீடிக்கிறதா? உடனே மருத்துவரைச் சென்று பரிசோதியுங்கள்.