Header Top Ad
Header Top Ad

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கோவையில் வேலைவாய்ப்பு; மே 8 கடைசி நாள்!

கோவை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கோவை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisement
Lazy Placeholder

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையி தொல்குடித் திட்டம் மற்றும் வன உரிமைகள் வன உரிமைச் சட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் கோவை மாவட்டம், கோட்டம், வட்டம் மற்றும் கிராம அளவில் ஒரு திட்ட மேலாண்மை அலகு அமைப்பதற்கு பழங்குடியினர் நலத்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கீழ்கண்டவாறு ஒரு வருட ஒப்பந்த காலத்திற்கு மட்டும் பணிபுரிய பின்வரும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement
Lazy Placeholder

Assistant Project Manage (APM)

Salary Rs.25,000

Eduction: Post Graduate in Social Work, Rural Development, Public Administration, Public Policy, Sociology or relevant social science back ground.

Work Experience: 5 years’ experience in NHO/civil society

Technical Assistant (TA)

Rs.15,000

Education: BE or diploma in civil engineering. Work Experience: Relevant 1-3 years of Work experience.

MIS Assistant

Rs.17,500

Education: Bachelor’s degeree n computer Science, BCA, Maths, or similar disciplines

FR Cell Coordinator (FRCC)

Rs.25,000

Education:B.E or Any Bachelor’s degree preferred-1 year of work experience in NGO sector

Block Resource Person(BRP)

Rs.12,000

Education: Diploma, 12th Grade

Village Resource 6 Person(VRP)

Rs.2,500

Education: School level

பணியாளர்கள் தேர்வு

ஒவ்வொரு பணிகளுக்கும் 3 பொருத்தமான கல்வித் தகுதி வாய்ந்த
விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்படி பணிகளுக்கு பழங்குடியினர் விண்ணப்பதாரர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேர்முகத் தேர்வு

கல்வித் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும்
பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விவரங்கள் மாநில திட்ட மேலாண்மை அலகு (State PMU) மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று தங்களது அசல் கல்விச் சான்றிதழ், அசல் சாதிச்சான்றிதழ், சுயவிவரப் படிவம் மற்றும் கடவுச் சீட்டு அளவிலான 2 புகைப்படங்கள் ஆகியவற்றை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்காணும் பணிகளுக்கு தகுதியுள்ள பழங்குடியினர் விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 8.05.2025 மாலைக்குள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

8.05.2025 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Recent News

Latest Articles