கோவையில் இன்றைய தங்கம் விலை; மீண்டும் கிடுகிடு உயர்வு!

கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அக்ஷயதிருதியை பண்டிகையை முன்னிட்டு கிடுகிடுவென தங்கம் விலை உயர்ந்தது. கடந்த ஏப்ரல் 28ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,940க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

பின்னர் கடந்த 29ம் தேதி கிராமுக்கு ரூ.40 உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 1ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.205 விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அன்று முதல் 4 நாட்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனிடையே இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.250 அதிகரித்துள்ளது.

கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,025க்கும் ஒரு பவுன் ரூ.72,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோவையில் இன்று 18 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7,410க்கும் ஒரு பவுன் ரூ.59,280க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிரமுக்கு ரூ.3 விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.111க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில்...

Video

Join WhatsApp