கோவை: கோவையில் மாநகராட்சி பள்ளியில் படித்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்…
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இரட்டை சகோதரிகளான கவிதா, கனிஹா இருவரும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 474 என்ற ஒரே மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். அதிலும் கணித பாடத்தில் இருவரும் 94 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் மேலும் 11, 12 ஆம் வகுப்பிலும் உயிரியல் பாடப்பிரிவை எடுத்துப் படிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தாங்கள் இது போன்று ஒரே மதிப்பெண்கள் எடுப்போம் என்று எண்ணிப் பார்க்கவில்லை என்றும் கடவுள் ஆசியால் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
இவர்களது தந்தை தேவாலயத்தை காவலராக பணிபுரிந்து வருகிறார்.