Header Top Ad
Header Top Ad

கோவை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி…

கோவை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர்…

கோவை மத்திய சிறையில் இருந்து இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து 44 கைதிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர். இன்று வெளியான தேர்வு முடிவுகளில், சிறைவாசிகளின் இந்த அபார வெற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.


சிறைவாசிகளுக்கு கல்வி அளிப்பதன் முக்கியத்துவத்தையும், அவர்களின் மறுவாழ்வுக்கான வாய்ப்புகளையும் இந்த சாதனை எடுத்துக்காட்டுகிறது. சிறை நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் தொடர் முயற்சியின் பலனாக இந்த மகத்தான வெற்றி கிடைத்து உள்ளது. தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Recent News