சென்னை: பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் சென்னையில் இன்று காலமானார்.
அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார் ராஜேஷ். அந்த 7 நாட்கள், கன்னிப்பருவத்திலே, மகாநதி, சத்யா, பயணங்கள் முடிவதில்லை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் ராஜேஷ் (வயது 75). தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு திரைத்துறையிலும் புகழ்பெற்றிருந்தார்.
மேலும் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து மக்களின் கவனத்தைப் பெற்றிருந்தார். பிரபலங்களுடனான தனது அனுபவங்களைக் கட்டுரையாக எழுதி வந்தார்
இதனிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜேஷ் சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.