சிலம்பத்தில் அசத்தல் மதுரையில் விருது வாங்கிய கோவை மாணவிகள்!

கோவை: சிலம்பத்தில் சிறந்து விளங்கிய கோவை மாணவிகள் இருவருக்கு மதுரையில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் விழா கடந்த 2ம் தேதி மதுரை யாதவா கல்லூரியில் நடைபெற்றது.

இதில் சிலம்பக் கலையில் சிறப்பான திறமை மற்றும் அர்ப்பணிப்புக்காக கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகக் கல்வி பயின்று வரும் நீனாஸ்ரீக்கு இளைய கலைமணி விருது வழங்கப்பட்டது. மேலும், பதக்கம், மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது.

இதேபோல் சிலம்பத்தில் தனித்திறனைக் கொண்டுள்ள அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரலாறு துறை மாணவி
நிதினாவுக்கு ரைசிங் ஸ்டார் சிலம்பம் விருது வழங்கப்பட்டது.

விருதுகளுடன் கோவை திரும்பிய மாணவிகள் இருவருக்கும், பெற்றோர் மற்றும் சக மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Recent News

Video

Join WhatsApp