கோவை: கோவையில் இந்த வார வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கோவையில் மே மாத இறுதியில் பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கியது. பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனிடையே ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து மழை குறையத் தொடங்கியது.
இதனிடையே இந்த வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோவையில் இன்றும், நாளையும் மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
ஜூன் 10, 11ம் தேதிகளில் குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல், 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
இந்த நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
இந்த மூன்று நாட்களிலும் லேசானது முதல் மிதமான மழையை மலை மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள பகுதி மக்கள் எதிர்பார்க்கலாம்.
கோவை நகரப்பகுதியில் வெப்பம் தணிந்து காணப்படும். கனமழைக்கான வாய்ப்பு குறைவு என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒரு சில தினங்களில் வானிலை மாற்றத்திற்கு ஏற்ப வானிலை மையத்தின் புதிய அறிவிப்புகள் வெளியாகும். அந்த அறிவிப்புகள் உடனுக்குடன் வழங்கப்படும்.
-NCC