கோவையில் காரை வழிமறித்து 1.25 கிலோ நகை கொள்ளை: மர்ம நபர்கள் துணிகரம்!

கோவை: கோவையில் காரை வழிமறித்து தங்க நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த ஜெய்சன் என்ற தங்க நகை பட்டறையாளர், தனது கடையில் பணியாற்றும் ஊழியர் விஷ்ணுவுடன் சென்னை சென்று 1.25 கிலோ தங்கக் கட்டியை வாங்கி ரயில் மூலம் இன்று காலை கோவையை வந்தடைந்தார்.

பின்னர் கோவையில் இருந்து இருவரும் கார் மூலம் பாலக்காடு நோக்கி புறப்பட்டனர்.

இந்நிலையில், க.க.சாவடி அருகே அவர்கள் வந்த போது, லாரியில் வந்த ஒரு கும்பல் காரை மறித்துள்ளது. தொடர்ந்து மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து .ஜெய்சன் மற்றும் விஷ்ணுவை காரில் இருந்து கீழிறக்கி விட்டு, தங்கக்கட்டியுடன் காரையும் எடுத்துக் கொண்டு மர்மமாக தப்பிச் சென்று உள்ளனர்.


இது தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp