Header Top Ad
Header Top Ad

“கலங்குகிறது உலகு” போர் குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள கவிதை!

உலக நாடுகளில் போர் பதற்றம் திவிரமடைந்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து X தளத்தில் வெளியிட்டுள்ள கவிதை:-

உலகின் தலையில்
மெல்லிய இழையில்
ஆடிக்கொண்டிருக்கிறது
அணுகுண்டு

“வக்கிர மனங்களால்
உக்கிரமாகுமோ யுத்தம்”
கலங்குகிறது உலகு

ஈரானின்
அணுசக்தித் தளங்களில்
டொமாஹக் ஏவுகணைகள்வீசி
அவசரப்பட்டுவிட்டது
அமெரிக்கா

வல்லரசுகள்
நல்லரசுகள் ஆகாவிடில்
புல்லரசு ஆகிவிடும்
பூமி

தான் கட்டமைத்த நாகரிகத்தைத்
தானே அழிப்பதன்றி
இதுவரை போர்கள்
என்ன செய்தன?

Advertisement

போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்

அணுகுண்டு முட்டையிடும்
அலுமினியப் பறவைகள்
அதனதன் கூடுகளுக்குத்
திரும்பட்டும்
– கவிஞர் வைரமுத்து

Recent News