10 நாட்களில் ரூ.2,000 குறைவு; இன்றைய தங்கம் விலை!

கோவை: தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது.

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக விலை குறைவைச் சந்தித்து வருகிறது.

Advertisement

ஜூன் 15ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.9,320க்கும், ஒரு பவுன் ரூ.74,560க்கும் விற்பனையானது.

தொடர்ந்து, 16ம் தேதி ஒரு கிராம் ரூ.9,305ஆக குறைந்தது. 17ம் தேதி ரூ.9,200க்கு விற்பனை செய்யப்பட்டது. 18ம் தேதி கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,250க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

அடுத்தடுத்த நாட்களில் சற்றே ஏற்ற இறக்கத்தைச் சந்தித்த தங்கம் விலை நேற்று கிராம் ரூ.9,155க்கும், ஒரு பவுன் ரூ.73,240க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று மீண்டும் விலை குறைவைச் சந்தித்துள்ளது. கோவையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.85ம், பவுனுக்கு ரூ.680ம் குறைந்துள்ளது.

அதன்படி தற்போது 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9,070க்கும், ஒரு பவுன் ரூ.72,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.65ம், பவுனுக்கு ரூ.520ம் குறைந்து, இன்று ஒரு கிராம் ரூ.7,475க்கும், பவுன் ரூ.59,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.119க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000க்கும் விற்பனையாகிறது.

Recent News

கோவையில் திறக்கப்பட்டது இணையத் தொழிலாளர்கள் கூடம்…

கோவை: சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையிலும் இணைய தொழிலாளர்கள் கூடம் திறக்கப்பட்டது. கோவையில் அமைக்கப்பட்டுள்ள இணையத் தொழிலாளர்கள் கூடத்தை எம்பி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாநகராட்சி பகுதியில்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp