கோவை மாநகராட்சியை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்- காரணம் என்ன?

கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்…

Advertisement

கோவை மாநகராட்சி வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டுக்கு 6% வரி உயர்வை கைவிட வேண்டும் , அபராத வரியை போட கூடாது,
பாதாள சாக்கடை, சூயஸ், அம்ருத் திட்டங்களுக்கு சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை சீரமைக்க வேண்டும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

Recent News

கோயம்புத்தூர் சங்கமம்… மக்களே கொண்டாட வாங்க… அழைக்கிறார் மாவட்ட ஆட்சியர்…!

கோவை: கோவையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2 தினங்களுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கோவையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வ.உசி மைதானத்தில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் 400 கலைஞர்களின் கலை...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp