Header Top Ad
Header Top Ad

கோவையில் தொழில்துறையினர் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடிய எடப்பாடி பழனிச்சாமி

கோவை: கோவையில் தொழில்துறையினர் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடிய எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொழில்முனைவோர், மகளிர் சுய உதவி குழுவினர்களுடன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார்.

அப்போது தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி

கோவை மாவட்டத்திற்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை, ஐந்து ஆண்டுகளில் முதல்வராக இருந்து கேட்ட திட்டங்களை வாரி வழங்கிய, கோவை மாவட்டத்திற்கு யாரும் செய்ய முடியாத திட்டங்களான அத்திக்கடவு – அவிநாசி திட்டம், ஏர்போர்ட் விரிவாக்கம், மெட்ரோ ரயில் அறிவிப்பு, என அறிவிப்பு வெளியிட்டு மூன்று கோடி ரூபாயை ஒதுக்கினார். அதிகமான பாலங்கள் சாலைகள் கூட்டுக் குடிநீர் திட்டம் அரசு மருத்துவமனை மேம்பாடு என, சேட்டை திட்டங்களை எல்லாம் கொடுத்த முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். எடப்பாடி முதல்வராக இருந்த போது, நானும் அமைச்சராக இருந்தேன், கோயம்புத்தூருக்கு தேவை என கேட்டவர்களை நேரில் அழைத்துச் சென்று அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறேன்.

நாம் என்ன கேட்டாலும் அவர் நிச்சயம் அதை செய்து கொடுத்தார். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் கூட, யார் ? என்ன கூறினாலும் அதை சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசுக்கு எடுத்துரைத்துக் கொண்டு இருக்கிறார். கோவை ராசியான மாவட்டம் என்பதால், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி இருக்கிறோம். கடந்த 2010 ம் அம்மா ஜெயலலிதா அவர்கள்தங்களுடைய பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி தான் கோட்டைக்கு சென்றார். அதேபோல எடப்பாடி அவர்களும் அவருடைய பிரச்சாரத்தை இங்கு இருந்து தான் ஆரம்பித்து இருக்கிறார். நிச்சயமாக 2026 தேர்தலில் வென்று கோட்டையை பிடிப்போம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

கடந்த நான்கு வருடங்களில் உங்களுக்கு தி.மு.க எதுவுமே செய்திருக்காது. ஆனால் உங்களுக்கு எல்லாம் செய்து கொடுக்கும் முதல்வராக எடப்பாடி இருந்து இருக்கிறார், இருப்பார் என்பதால் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Advertisement

தொடர்ந்து அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினருடன் எடப்பாடி பழனிசாமி உரையாடல் மேற்கொண்டார்.

தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பில் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் சங்கத்தினர் சார்பில், தங்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்து இருக்கிறீர்கள். இந்தியாவிலேயே குரு சிறு நடுத்தர தொழில் அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதில் தான் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதனால் அ.தி.மு.க ஆட்சி இருக்கும் வரை அந்த தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்தது. தொழில் செய்ய முடியாத நிலைமை வரும்பொழுது கூட அதற்கான உதவிகளை செய்தது. ஆனால் இன்றைய ஆட்சியில் தங்களுக்கு ஏற்பட்டு உள்ள பிரச்சனைகள் அந்த பிரச்சனையினால் எவ்வளவு இழப்பு சரிவு என்பதையெல்லாம் நீங்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.

இது ஒரு மிகவும் முக்கியமான தொழில். சாதாரண மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில். இதில் நிச்சயம் நாங்கள் கவனம் செலுத்துவோம். இதில் முக்கியமாக நீங்கள் கூறியிருப்பது மின்கட்டண உயர்வைதான் சொல்லி இருக்கிறீர்கள். நிச்சயம் இதற்காக எங்களால் முடிந்த சலுகைகளை நிச்சயம் செய்து கொடுப்போம்.

அதேபோல நமது மாநிலத்தில், ராணுவ தளவாட இடங்கள் அமைப்பதற்காக அதிமுக ஆட்சியில் மத்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசுடைய தொடர்பு இல்லாத காரணத்தால், நம்ம சைக்கி வேண்டிய திட்டங்கள் எல்லாம் கிடைக்காமல் போய்விட்டது. நிச்சயமாக அவர்களின் ஆதரவோடு அண்ணா.தி.மு.க ஆட்சி அமைக்கின்ற பொழுது, மத்திய அரசோடு மீண்டும் இணைந்து ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த தொழிற்சாலை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும்.

அதோடு தென்னிந்திய ஜவுளி உற்பத்தி சங்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, ஜவுளி என்பது மிகவும் முக்கியமான தொழில். கோவை ஈரோடு திருப்பூர் சேலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுமே ஜவுளி உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு உண்டான மூலப்பொருள் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து பயன்படுத்துகிறோம். நானும் விவசாயியாக இருப்பதனால் கூறுகிறேன் பருத்தி பயிரிட்டால் அதை எடுப்பதற்கு யாரும் வருவது இல்லை ஆட்கள் கிடைப்பது இல்லை. அதற்குப் போதிய ஆட்கள் இல்லாததால் பருத்தி உற்பத்தி செய்கிற நிலை குறைந்துவிட்டது. வெளிநாடுகளில் பருத்தி சாகுபடியில் என்ன டெக்னாலஜிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்தோம். இதற்கு நவீன முறையில் பருத்திகள் எப்படி எடுப்பது என்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டோம். ஆனால் ஒரு கட்டத்திற்கு வரும்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது இந்த தொழில்கள் நலிவ டையாமல் பார்த்துக் கொண்டோம்.

அதேபோல விவசாயிகளுக்கு தேவையான நிறைய திட்டங்களை அ.தி.மு.க ஆட்சி கொடுத்தது. நாம் எவ்வளவு தான் தொழில் செய்தாலும் உணவு என்பது முக்கியம். உணவு நீர் இல்லாமல் நாம் வாழ முடியாது. அதற்கு நாம் முன்னுரிமை கொடுத்து விவசாயிகளுக்கு எந்த அளவில் பாதுகாப்பு கொடுக்க முடியும் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும் என கருதி தேசிய அளவில் krish விருதை நாங்கள் தொடர்ந்து ஐந்தாண்டுகளும் பெற்றோம். உயர்நிலையை பாதுகாக்க கூடிய அவசியம் ஏற்பட்டது. ஏரி, குளம், குட்டைகளை நிறைய தூர்வாரி வெட்டினோம். வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு உரமாக கொடுத்தோம். இயற்கை உரமாக அது இருந்தது. விவசாயிகளுக்கும் நல்ல விளைச்சல் கிடைத்தது.

அதேபோல விமான நிலைய விரிவாக்கம் நிச்சயம் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் கோவை என்பது தொழில் வளம் நிறைந்த மாநிலம். வெளிநாடுகளில் இருந்து வந்து செல்வதற்கு விமான நிலையம் மிகவும் முக்கியம்.. அதேபோல தன்னுடைய சொந்த நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் தவிப்பதையும் புரிந்து கொள்ள முடியும். விவசாயியாக இருக்கும் பொழுது உங்களுக்காகத் தான் நான் நிச்சயம் பேசுவேன். ஆனால் ஒரு முதல்வராக இருக்கும்பொழுது அனைவருக்கும் பொதுவானவனாக இருக்க வேண்டும். ஒரு நிலத்தை கொடுக்கும் பொழுது உயிர் பிரிந்தால் எப்படி இருக்குமோ ? அப்படித் தான் ஒரு விவசாயிக்கு இருக்கும். காலங்காலமாக தங்களிடம் இருக்கும் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளை பொது பயன்பாட்டிற்கு கொடுக்கும் போது பல்வேறு பிரச்சனைகளை கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் இங்கு வந்திருக்கிற நிலம் கொடுப்பாளர்கள் நிலம் கொடுக்க தயார் என கொடுத்து இருக்கிறீர்கள்.

மாவட்டம் வளர்ச்சி அடையும் என்பதால் நிலங்களை கொடுத்து இருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எந்த அளவீடு இழப்பீடு பெற்று தர முடியுமோ அதற்கெல்லாம் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். உங்களுக்கு தேவையான மாற்று நிலம் கூட நாங்கள் பெற்றுக் கொடுத்து இருக்கிறோம். தேவையான இழப்பீட்டுத் தொகையை எவ்வளவு பெற்றுக் கொடுக்க முடியுமோ ? அவ்வளவு பெற்றுக் கொடுத்திருக்கிறோம். திமுக எதிலும் சிக்கல் உண்டாக்குவார்கள், அதேபோல இதுலயும் பிரச்சனை செய்தார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசோடு இணைந்து விமான நிலைய விரிவாக பணிகள் முற்றிலுமாக முடிக்கப்படும்.

சுயநிதி குழுக்கள் இங்கு அவர்களுடைய கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள்,
ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போது எங்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தாலும், சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை பார்த்து விட்டு தான் அம்மா மேடையில் சென்று அமர்வார். அவர் பெண்ணாக இருந்த காரணத்தால், பெண்களின் தொழிலுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பார். நிச்சயமாக அதிமுக ஆட்சிக்கு வரும்போது அவர்களின் தேவை அறிந்து நிதி வழங்கப்படும். அதேபோல நம் மத்திய அமைந்தவுடன் அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானிய நிதியும் வழங்கப்படும்.

கிரில் உற்பத்தி மற்றும் தங்க நகை உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கைக்கும் உடைய பரிசீலனை செய்து அவர்கள் கேட்ட அனைத்தும் அதிமுக ஆட்சியில் செய்து கொடுக்கப்படும். அதேபோல அவர்கள் மின் கட்டணத்தை குறைக்க மனு கொடுத்து இருக்கிறார்கள் அதுவும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் குறைக்கப்படும். நிலை கட்டணத்தையும் அ.தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் நிச்சயம் பரிசீலிக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல பத்திரிகையாளர்கள் நல வாரியத்தினர் கோரிக்கை வைத்து உள்ளனர், பத்திரிக்கையாளர்கள் என்பது ஒரு நாட்டினுடைய தூண், ஆனால் தி.மு.க ஆட்சி வந்த பிறகு, எதையும் போட முடிவதில்லை. ஆனால் இங்கு பேசியவர்கள் அவர்களுடைய மனக்குறைகளை எடுத்துக் கூறுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்யத்தான் கட்சிகள் இருக்கிறது. பிரச்சனையை தீர்க்கிற அரசாங்கமாக திமுக இல்லை.பிரச்சனையை உருவாக்குகிற அரசாக தான் தி.மு.க இருக்கிறது. அதேபோல அ.தி.மு.க ஆட்சியில், கோவையில் 130 பேருக்கு கோவையில் சலுகை விலையில் மனை பட்டா வழங்கப்பட்டது. இன்னும் பல பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனை கிடைக்கவில்லை என கூறி இருக்கிறீர்கள். நிச்சயமாக விடுபட்ட பத்திரிக்கையாளர்களுக்கு ஆட்சி அமைத்த பிறகு உங்களையும் கவனிக்கும். நாங்க எவ்வளவு திட்டங்களை கொண்டு வந்தாலும் நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்லும் பணியை செய்கிறீர்கள். எங்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் நிறைய செய்வோம். நீங்கள் உண்மையை செய்தியாக சொன்னால் போதும். எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. நாங்கள் உழைக்கும் உழைப்பு மக்களிடம் சென்று சேர வேண்டும் என என்னுடைய கோரிக்கையாக உங்களிடம் வைக்கிறேன் எனக் கூறினார்.

Recent News