Header Top Ad
Header Top Ad

கோவையில் வழிப் பறியில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது….

கோவை; கோவையில் தொடர் வழிப் பறியில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது…

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சின்ன வேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜித் வீரன் (25) என்பவர் மீது அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அந்த நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின்படி வழிப்பறி வழக்கின் குற்றவாளியான அஜித்வீரன் (25) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கான நகலை சிறையில் உள்ள குற்றவாளி அஜித்வீரனிடம் அதிகாரிகள் கொடுத்தனர்.

Recent News