கோவை: தகுதி வாய்ந்தவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெறும் வகையில் இன்று நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இன்று விண்ணப்பங்கள் ஏற்கப்பட உள்ளன.
பொதுமக்கள் குறைகள் மற்றும் சேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழக அரசு சார்பில் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் வரை வாரத்தில் 4 நாட்கள் ( 6 இடங்களில்) இந்த முகாம் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாமில் பல்வேறு சேவைகள் வழங்கப்படும் நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இன்று எங்கெல்லாம் இந்த முகாம் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யலாம்…
விண்ணப்பிக்க ஆவணங்கள்
மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கச் செல்வோர், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் ஈட்டுபவர்கள்.
5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலமோ அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலமோ வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
3600 யுனிட்டுக்கு அதிகமாக மின் பயன்பாடு செய்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஒரே குடும்பத்தில் இருவருக்கு வழங்கப்படாது.
மக்கள் பிரதி நிதிகள் உள்ள குடும்பத்தினர் விண்ணப்பிக்க முடியாது. அரசு, பொதுத்துறை, கூட்டுறவு அமைப்பு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் விண்ணப்பிக்க முடியாது
திட்டம் குறித்து மேலும் அறிய தமிழக அரசின் இணையதளத்தைப் பார்க்கலாம் https://kmut.tn.gov.in/