Header Top Ad
Header Top Ad

கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை? அதிக மழை எங்கே?

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது

அதன்படி, கோவை விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 0.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சுற்றுவட்டாரப் பகுதிகளில் 0.60 மில்லி மீட்டர் மழையும், பெரியநாயக்கன் பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு சென்டி மீட்டர் மழையும், பில்லூர் டேம் பகுதிகளில் 2 மில்லி மீட்டர் மழையும், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6 மில்லி மீட்டர் மழையும், சிறுவாணி அடிவாரத்தில் 5 மில்லி மீட்டர் மழையும், மதுக்கரை தாலுகாவில் ஒரு மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், பொள்ளாச்சி தாலுகாவில் 2 மில்லி மீட்டர் மழையும், மக்கினாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மில்லி மீட்டர் மழையும், ஆனைமலை தாலுகாவில் 2 மில்லி மீட்டர் மழையும், ஆழியாறில் 6.6 மில்லி மீட்டர் மழையும், சின்கோனா சுற்றுவட்டாரத்தில் 42 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், சின்னக்கல்லார் பகுதியில் அதிகபட்ச அளவாக நேற்று 76 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட பகுதிகளில் 36 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை தாலுகாவில் 34 மில்லி மீட்டர் மழையும், சோலையாரில் 33 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 249.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் நேற்று 10.87 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent News