Header Top Ad
Header Top Ad

நிலநடுக்கம்: ரஷ்யா, ஜப்பானை தாக்கத் தொடங்கியது சுனாமி! _ VIDEOS

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யா, ஜப்பானை சுனாமி அலைகல் தாக்கத் தொடங்கியுள்ளன.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 என்ற ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement

இதன் காரணமாக கிழக்கு ரஷ்ய கடற்கரைகள் மற்றும் வடக்கு ஜப்பான் கடற்கரைப் பகுதிகளுக்கும், அமெரிக்காவின் ஹுவாய் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

தொடர்ந்து, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாட்டு கடற்கரைகளையும் சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளன. 4 மீட்டர் அளவுக்கு கடல் அலைகள் மேலெழும் நிலையில், கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த நிலநடுக்கம் காரணமாக நியூசிலாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவிற்கு பாதிப்பு இல்லை என்று சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் இந்த சுனாமியால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படலாம் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகளின் வீடியோ காட்சிகளை இங்கே காணலாம்.

நிலநடுக்கம் ஏற்பட்ட இடம்

நிலநடுக்கம்

சுனாமி அலைகள்

Recent News