நம்ம சிரிக்க வைத்த நடிகர் மதன் பாப் காலமானார்!

சென்னை: நடிகர் மதன் பாப் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

மதன் பாப் கடந்த 1953,ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். கிருஷ்ண மூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர், சினிமாவிற்குள் நுழைகையில் தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

Advertisement

இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்த மதன் பாப்பிற்கு கடந்த 1984ம் ஆண்டு வெளியான நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் நடிகராகும் வாய்ப்பு கிடைத்தது.

குணச்சித்திர, நகைச்சுவை நடிகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்த மதன் பாப், ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் படங்கள் நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு படங்கள் என சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் மதன் பாப் நடித்துள்ளார்.

இதனிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 71.

மதன் பாப் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

தனது தனித்துவமான சிரிப்பு மற்றும் உடல் மொழியுடன் நம்மை சிரிக்க வைத்த மதன் பாப் மரணத்திற்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதன் பாப் நடித்த காமெடி காட்சிகளில் சில:-

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
https://chat.whatsapp.com/Di5OOIMCPha6vMceSju9G7