Header Top Ad
Header Top Ad

காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு; விண்ணப்பிக்க லிங்க் உள்ளே…!

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை இந்த தொகுப்பில் காணலாம்.

மொத்தம் 3,644 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதோடு கூடுதலாக 21 இடங்கள் ஒதுக்கீட்டின் கீழ் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Advertisement

இரண்டாம் நிலை காவலர் (ஆண்கள்-பெண்கள்_ – 2,833
இரண்டாம் நிலை சிறை காவலர் – 180 (ஆண்கள் 142, பெண்கள் 38)
தீயணைப்பாளர் (ஆண்கள்) – 631

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை ஊதியம் வழங்கப்படும்.

அறிவிப்பு வெளியான தேதி – 21.08.2025
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி – 22.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.09.2025
விண்ணப்பம் திருத்தம் செய்யும் கடைசி நாள் – 25.09.2025

Advertisement

எழுத்துத் தேர்வு நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை காவலர்களில் சார்ந்துள்ள வாரிசுகளுக்கு – 10%
இரண்டாம் நிலை சிறைக் காவலர்களில் சார்ந்துள்ள வாரிசுகளுக்கு – 10%
தீயணைப்பாளர் பணிக்கு – 10%
விளையாட்டு வீரர்களுக்கு– 7%
முன்னாள் இராணுவத்தினர் – 5%
ஆதரவற்ற விதவைகள் – 3%
தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை (PSTM) – 20%

ஜூலை 1, 2025 நிலவரப்படி குறைந்தது 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்; அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Advertisement

இந்த தேர்வுக்கான முழு விவரங்களும் TNUSRB இணையதளத்தில் (www.tnusrb.tn.gov.in) பதிவேற்றப்பட்டுள்ளன.

Recent News