கோவை: கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக நாளை (26.08.2025) கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், 50,51 வது வார்டுகளுக்கு ஹிந்துஸ்தான் கல்லூரி கலையரங்கத்திலும்,
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
காரமடை நகராட்சியில் 13,15 ஆகிய வார்டுகளுக்கு ஆர். கே நகர் விஆர் ஹாலிலும், தென்கரை பேரூராட்சியில் 1,2,3,4,5,6,7 ஆகிய வார்டுகளுக்கு தண்ணீர்பந்தலில் உள்ள சிவசக்தி மஹால் திருமண மண்டபத்திலும்
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னத்தூர், மசக்கவுண்டன்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு குரும்பபாளையத்தில் உள்ள ராயர்குல திருமண மண்டபத்திலும்,
பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னம்பாளையம் ஊராட்சிக்கு லட்சுமி மஹாலிலும், பன்னிமடை புறநகர் பகுதிக்கு தர்மராஜா கோவில் வளாகத்திலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.