கோவை: கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வட மாநிலத்தவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார்.
கோவை ராஜவீதி தேர்நிலை திடல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் “நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என்ற வரலாற்று உண்மையை உணர்த்த இந்த நிகழ்ச்சியை கோவையில் நடத்தினால் சரியாக இருக்கும் என நினைத்து நடத்தி வருகிறோம் என்றார். உலகத்தின் முதல் மொழி தமிழ், முதல் மானுடன் தமிழன் என்றார்.
பல்வேறு இடங்களில் பரவி வாழ்ந்த தமிழன், தமிழ்நாடு என்று சிறு இடத்தில் குறுக காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர் மொழி திணிவு, பண்பாட்டு சிதைவு, வரலாற்று திரிபு, வழிபாட்டு மறைப்பு தான் என்று கூறினார்.
இந்த நிலத்தையும் பறிகொடுக்கும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள் என்றும் மொழி இழந்தால் அனைத்தையும் இழப்பாய்
முதலில் நம்மை மொழியில் இருந்து வெளினேற்றினார்கள் என்றார்.
தாயை விபச்சாரி என்று கூறியவரை தந்தை(பெரியார்) என கூறுகிறாய் என்றும்
இளங்கோவடிகள், கம்பன் என்பவரை கடுமையாக சாடியவர் பெரியார் என தெரிவித்தார். தமிழர் வழிபாடு இயற்கை வழிபாடு, தெய்வம் மூத்தோர் ஆவர், தமிழர் இயற்கையை போற்றினான், தமிழர்களின் தெய்வம் இயற்கை என்றார் தமிழன் என்ற திமிரில் இருங்கள், தலை நிமிர்ந்து நில்லுங்கள் அறிவை கடன் கொடுத்தவன் தமிழன் என்றார்.
தற்போது கோவில்களில் தமிழில் மந்திரம் ஓதுங்கள் என போராட வேண்டி உள்ளது என்றும் முருகனுக்கே தமிழில் மந்திரம் இல்லாமல் போனது என்றார். மற்ற மொழி மனிதர்களால் பேசப்பட்டது, தமிழ் மொழி இறைவனால் பேசப்பட்டது, அங்கிருந்து மொழியை வெளியேற்றினார்கள்
கோவில்கள் வரலாற்று தளம் அல்ல வரலாற்று ஆவணம் என்றார்.
பெரியார் தமிழில் பேசினால் பிச்சை கூட எடுக்க முடியாது என்றார், ஆனால் கடைசி வரை தமிழில் பேசி, தமிழில் எழுதி பிச்சை எடுத்தவரும் அவர் தான் என சாடிய அவர்
மொழியை அழிப்பதில் அவர்கள் சாதித்தார்கள் என்றார். ஆங்கிலம் மொழி நமக்கு அறிவாகும் என்று கூறுகிறார்கள் அப்படியென்றால் அடுத்த மொழி எப்படி எனக்கு அறிவாகும்? என கேட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆங்கிலம் படித்தவர்கள் அறிவாளிகளா? என வினவிய அவர், அவர்கள் தான் அதிகம் கொள்ளையடிக்கிறார்கள் என்றார். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் எதற்கு கோடிக்கணக்கானோர் இங்கு பணிபுரிய வருகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
தம்பி விஜய் உச்சத்தை விட்டுவிட்டு வருமானத்தை விட்டுவிட்டு வருகிறேன் என கூறுகிறார் யார் அவரை அரசியலுக்கு அழைத்தார்கள்?வீட்டு வாட்ச்மேன் கூட அரசியலுக்கு அழைக்கவில்லை சேவை செய்ய வந்தால் சேவை செய் என்றார்.
எம்ஜிஆர் ஒருமணி நேரம் ஆனாலும் எதையும் பார்க்காமல் பேசுவார் நடிகர் விஜயகாந்த் மனதில் இருந்து பேசுவார் ஆனால்
ஸ்டாலின், எடப்பாடி பேப்பர் பார்த்து பேசுவார்கள் என்றார்.
100 நாள் வேலை திட்டத்தில் நட்டு வைத்த மரங்கள் எத்தனை? என கேள்வி எழுப்பிய அவர் தாயம் விளையாடுதல், சீட்டு ஆடுதல் தான் 100 நாள் வேலையாக உள்ளது என்றார். மாடு மேய்க்க மாட்டேன் என கூறுகிறார்கள் ஆனால் மாடு, ஆடுகளை நபிகள், இயேசு, கிருஷ்ணர் எல்லாம் மேய்த்துள்ளார்கள் என்றும் அதற்காகவே பால்வளத்துறை உள்ளது அந்த துறைக்கு அமைச்சர் இருக்கிறார் அவர் என்ன புடுகிறார் என அவருக்கே தெரியாது என்றார்.
தற்போது டீ கடைகளை ராஜஸ்தான் காரர்களை தான் வைத்துள்ளார்கள், அதனால் பொருளாதாரம் சுரண்டபடுகிறது இங்கு டீக்கடைகளில் எச்சில் கிளாஸை கழுவுவதை கேவலாமாக நினைத்து அரபு நாட்டில் கழிவறை கழுவுகிறார்கள் என்றும் எந்த தொழிலும் இழிவல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
எங்கள் இனத்தின் விடுதலை தான் எங்கள் இலக்கு என்றும் கூறினார். மேலும் தற்போது படித்தவர்கள் டாஸ்மாக்கில் வேலைக்கு இருக்கிறார்கள் என்றும்
போதையின் பாதையில் செல்லாதீர்கள் என கூறுகிறார்(ஸ்டாலின்), ஆனால் போதையின் பாதையை திறந்தவர் அவர் தான் என்றார்.
விருந்து சாப்பிட வந்தவன் வீடு என்னுடையது என்று கூறியது போல் அண்டி பிழைக்க வந்த சிங்களன் நாடு என்னுடையது என்றான் என்றும் வந்தவரை வாழ வைத்த நாங்கள் அகதிகள் ஆனோம், மற்றவர்கள் எல்லாம் அங்கு இடம் வாங்கும் போது நாங்கள் எதையும் வாங்க முடியாது
மற்றவர்கள் எல்லாம் குடியுரிமை வாங்கும் போது நாங்கள் வாங்க முடிவதில்லை, இந்த வலியை உங்களுக்கு கடத்தி விட்டால் நான் பிரபாகரன் மகன் என்றார்.
இன்னும் 5 ஆண்டுகளில் வட மாநிலத்தவர்கள் அவர்களுக்கு ஒரு தொகுதியை தேர்தலில் கேட்பார்கள் பெரம்பலூர், கோவை தெற்கு, திருப்பூர் ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்தலில் கேட்பார்கள் என்றும் வடமாநிலத்தவர்கள் இங்கு வேலை புரியுங்கள், ஓட்டை உங்கள் ஊரில் போடுங்கள் என்றார்.
இன்று காவல்துறையினரை அடிக்கிறார்கள் என்றால் நாளை நம்மை அடிப்பார்கள்
இஸ்லாமிய சொந்தங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை ஆனால் நான் உங்களோடு தான் இருக்கிறேன் என்றார்.
பீகாரில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் இங்கு ஓட்டுரிமை வைத்துள்ளார்கள் என்றும் அவர்களை கேட்டால் காங்கிரஸ் என்று கூறமாட்டார்கள் மோடி பாஜக என்று தான் கூறுவார்கள் என்றார்.
தேர்தலில் என்னை ஜெயிக்க வைத்தால் சீமான் ஆகிய நான் என்று கூறுகின்ற போதே வரலாறு திரும்புவது போன்று வட இந்தியர்கள் திரும்பி விடுவார்கள், குற்றங்கள் சரிசெய்யப்படும் என்றார். மேலும் நான் ஈரோடு கிழக்கு தொகுதியில் நிற்கும் போது வட மாநிலத்தவர்கள் ஓட்டு எவ்வளவு தருவீர்கள் என கேட்டார்கள் என்றும்
இந்தி பேசும் நாடாக இந்த நாடு மாறி வருகிறது. இவற்றை எல்லாம் மாற்ற ஒரே வழி நாம் தமிழர் கட்சி வெல்வது இதை செய்ய தவறினால் இனத்தை இழப்பாய், பலத்தை இழப்பாய் என்றார்.
இன்னும் கொஞ்சம் நாளில் பீகார் தமிழ்நாட்டில் இருக்கும் என்றும்
என் வாழ்விடத்திலேயே இருந்தால் அரசு வேலை இதனை சாத்தியமாக்குவேன் என்றார்.
தொடர்ந்து கோவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்
அதன்படி கோவை வேட்பாளர்கள்கா தெற்கு-பேரறிவாளன்,
கவுண்டம்பாளையம்- கலாமணி ஜெகநாதன்,
சிங்காநல்லூர்- நேரு, வால்பாறை-உமாதேவி,
மேட்டுப்பாளையம்-கோபாலகிருஷ்ணன்,
தொண்டாமுத்தூர்- ரஜிப்பூர் நிஷா ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கட்சியின் தொண்டரின் பெண் குழந்தைக்கு ஈழ துவாரகா என பெயர் சூட்டினார்.