Header Top Ad
Header Top Ad

தமிழக அரசை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் தமிழக அரசு கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

16 சதவீத ஊதிய உயர்வில் 10 சதவீதம் மட்டுமே வழங்கிய EMRI-GHS நிறுவனத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த்தை மீறி EMRI-GHS நிறுவனம் தன்னிச்சையாக முடிவு செய்து கடந்த 4 ஆண்டுகளாக வழங்கிய 16 சதவீத ஊதிய உயர்வில் 10 சதவீதம் மட்டும் இந்த ஆண்டு வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

மீதமுள்ள 6 சதவீத்ததை திருடி உள்ளதாக குற்றம் சாட்டிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் உடனடியாக அந்த ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி 12 மணி நேரம் வேலை செய்வதாகவும் அதற்கான ஊதியமும் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்தனர்.

Advertisement

108 ஆம்புலன்ஸ் பலரும் பழுதடைந்து உள்ள நிலையில் அது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து சரி செய்யுமாறு கூறினால் நிதியில்லை என்று அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் தெரிவித்தனர். எனவே இந்த போக்கை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

கோவையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

Recent News