டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவ்வாறு பயணிக்கும் போது, பல்வேறு இடங்களில் அவருக்கு வழங்கப்பட்ட சால்வைகள், ஓவியங்கள், கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட அரிய பொருட்களை ஆண்டுதொறும் ஏலம் விடுவது வழக்கம்.
அந்த வகையில் 7வது ஆண்டாக இந்தாண்டு ஏலம் தொடங்கியுள்ளது. மொத்தம் 1,300க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் இந்தாண்டு ஏலத்திற்கு வந்துள்ளன.
pmmementos.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இன்று முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் ஆன்லைன் ஏலம் விடப்பட்டுள்ளன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், நாட்டின் முக்கியமான சமூக நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஏலம் காந்தியின் பிறந்த நாளான அக்., 2ம் தேதியுடன் நிறைவடைகிறது.