கோவை: அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு நடிகர் மாதவன் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.
கோவை ஒப்பணக்கார வீதியில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் மாதவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியலுக்கு வருவதற்கான எண்ணம் இல்லை என்றார். தாம் நடித்து வரும் ஜிடி நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், கோவையில் முதல் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டிருப்பதாக கூறினார். ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக வெளியே கொண்டு வருவோம் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
கரூர் தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்த கேள்விக்கு இவ்வளவு செலவு செய்து கடையை திறந்து உள்ளார்கள், கரூர் குறித்து பேசினால் அது தலைப்பு செய்தியாக மாறிவிடும் எனவும் அதனால் அதை பற்றி பேச வேண்டாம் என கூறி சென்றார்.




