கோவை: கோவையில் புதிதாக கட்டப்பட்ட GD மேம்பாலத்தின் அருகே நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர் அவினாசி சாலையில் உப்பிலிபாளையம்- கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டபட்ட ஜிடி மேம்பாலத்தை இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் திறந்து வைத்தார். இந்த பகுதிகளை கடக்க இதுவரை 30 நிமிடத்திற்கும் மேலான நிலையில்,தற்போது 10-15 நிமிடங்களில் கடந்து விடலாம்.
இந்த புதிய மேம்பாலத்தில் இன்று அதிகாலை 1:30 மணியளவில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் பகுதியை நோக்கி கார் ஒன்று மேம்பாலத்தில் இருந்து வேகமா இறங்கியதாக தெரிகிறது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் காரில் இருந்த இருகூர் பகுதியை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் நொறுங்கிய நிலையில் காரில் இருந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு, ESI மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


