Header Top Ad
Header Top Ad

Coimbatore weather: இந்தவாரம் வெப்பத்தில் சென்னையை மிஞ்சுகிறது நம்ம கோவை…!

கோவை: கோவையில் இந்த வாரம் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல நாட்களாக குளுகுளு வென்ற சீதோஷன நிலையில் வாழ்ந்து வந்த கோவை மக்கள், திடீரென வெப்பம் அதிகரித்து வருவதால் அவதியடைந்து வருகின்றனர்.

Advertisement
Lazy Placeholder

கடந்த வாரம் கோவையில் குறைந்தபட்ச, 18 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இந்த நிலையில், இந்த வாரம் கோவையில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவையில் இன்று முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Lazy Placeholder

பிப்ரவரி 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை வெப்பநிலை 1 டிகிரி அதிகரிக்கும் என்றும், அப்போது குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Lazy Placeholder

சென்னையில் இந்த வாரம் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், கோவையில் சென்னையை விட அதிக வெப்பம் பதிவாகும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு கோவை மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.

Recent News

Latest Articles