கட்டாயம் படிக்க வேண்டிய 6 உலக தலைவர்களின் சுயசரிதைகள் ஒரு பார்வை!

சுயசரிதை என்பது ஒருவர் தன் வாழ்க்கை அனுபவங்களைத் தானே எழுதும் வாழ்க்கை வரலாறு.

சுயசரிதை எழுதும் நபர் ஒருவர் தனது குழந்தைப் பருவம், கல்வி, குடும்பம், வேலை, சந்தித்த சவால்கள், வெற்றிகள், தோல்விகள், எண்ணங்கள், உணர்வுகள், லட்சியங்கள் போன்றவை பற்றிப் பதிவு செய்கிறார்.

சுயசரிதைகளைப் படிப்பதால், நாம் ஒருவரின் அனுபவத்தின் வழியே கற்றுக் கொள்ளத் தொடங்குகிறோம்.

வாழ்க்கை எளிதல்ல, ஆனால் முயற்சியால் வெற்றி பெற முடியும் என்பது போல் நமக்கு புதிய வாழ்க்கை நோக்கம் உருவாகிறது.

சுயசரிதைகள் படிப்பது முயற்சி, ஒழுக்கம், நேர்மை போன்ற மதிப்புகளை ஒருவரிடம் அதிகரிக்கும். மேலும், வரலாறு மற்றும் சமூகப் பின்னணிகளையும், அந்த நபரின் வாழ்க்கையின் பின்புலத்தில் உள்ள சமூகம், காலகட்டம், அரசியல் போன்றவற்றையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

சுயசரிதைகள் நடைமுறை வாழ்க்கை சம்பந்தப்பட்டும், நம்முடன் நெருக்கமான உணர்வை கொடுப்பதாலும் படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.

அமேசான் பிரைமில் இணைய கீழே சொடுக்கவும் 👇

குறிப்பாக குழந்தைகள், மாணவர்களுக்கு இவை அவர்களின் வாழ்வை மேம்படுத்த உதவிடும். முதற்கட்டமாக கீழே 6 உலக தலைவர்களின் சுயரிசதை புத்தகங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளோம்.

மேலும், அந்த சுயசரிதையின் சுருக்க விளக்கமும், அவற்றை வாங்குவதற்கான லிங்குகளும் கொடுத்துள்ளோம்.

மஹாத்மா காந்தி தனது சத்திய சோதனை நூலில் தனது பயணங்களில் இருந்து தேசிய வழிகாட்டியாக மாறிய வரலாற்றைப் பகிர்கிறார்.

இங்கிலாந்தில் கல்வி, தென் ஆப்பிரிக்காவில் சேவை, இந்தியாவில் சுதந்திர போராட்டம் என வாழ்நாள் முழுவதும் சத்தியத்தை நோக்கி செய்த முயற்சிகள் இந்த புத்தகத்தில் மிக நேர்மையாக வெளிப்படுகின்றன.

அழுத்தமான வாழ்வியல் நெறிகள், தன்னலமற்ற சேவை, மற்றும் உளவியல் சோதனைகளின் வழியாக, இந்த நூல் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை சிந்திக்க வைக்கும் ஓர் ஆழமான அனுபவமாக இருக்கும்.

நேர்மையான வாழ்வை நேசிப்பவர்களுக்கு இது தவற விடக்கூடாத ஓர் புத்தகம்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமே (Autobiography) இந்த அக்னி சிறகுகள்.

கலாமின் பொது வாழ்க்கையும், விஞ்ஞானியாக வளர்ந்த பயணமும், இந்திய ஏவுகணை வளர்ச்சி திட்டங்களில் அவருடைய பங்கையும் பற்றி விரிவாக கூறுகிறது இந்த புத்தகம்

ஒரு சிறு நகரான ராமேஸ்வரத்தில் பிறந்த சிறுவன், இந்தியாவின் மிகச் சிறந்த விஞ்ஞானியாகவும், குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த பயணத்தை விவரிக்கிறது.

அவர் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள், கடின உழைப்பும், விஞ்ஞான வளர்ச்சிக்காக அவர் செய்த பணி இந்த புத்தகத்தில் உள்ளன.

இது மாணவர்களும், இளைஞர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நுால். கனவுகளை எப்படி நிஜமாக்குவது என்பதை நீங்கள் கற்பது உறுதி.

ஆடோல்ஃப் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறும் அரசியல் பார்வையும் அடங்கிய நூல் மைன் காம்ப் (Mein Kampf). தமிழில் என் நாடு என் மக்கள் எனது போராட்டம்.

கடந்த 1920களில் சிறையில் இருந்தபோது எழுதிய இந்த நூலில், ஹிட்லர் தனது வாழ்க்கைப் பின்னணி, அரசியல் நோக்கங்கள் மற்றும் ஜெர்மனிக்கான கனவுகளை பகிர்ந்திருக்கிறார்.

நாசி சிந்தனையின் வேர்கள், ஒரு காலத்தின் வரலாற்றுப் பின்னணி, மற்றும் தீவிர அரசியல் யோசனைகள் பற்றிய புரிதலுக்காக இந்த நூல் முக்கியமானது.

இந்த நூல் மிகுந்த சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், வரலாற்றுப் புரிதலுக்காகவும், தீவிர சிந்தனையின் அபாயங்களை உணரவும் வாசிக்க விரும்பும் பயனர்களுக்கே பரிந்துரைக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முன்னணி கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவரான பென்ஜமின் ஃபிராங்க்லினின் வாழ்க்கைப் பதிவே இந்த நூல்.

ஒரு அச்சு தொழிலாளியின் உதவியாளராக தொடங்கி, எழுத்தாளர், விஞ்ஞானி, தூதர் மற்றும் தலைவராக உயர்ந்த அவர், வாழ்க்கையின் பல அனுபவங்களையும், உழைப்பு, தன்னம்பிக்கை, ஒழுக்கம், அறிவியல் ஆர்வம் போன்ற முக்கியத் தருணங்களையும் வெளிப்படையாகப் பகிர்கிறார்.

இந்த நூல் ஒரு வரலாற்று பதிவு மட்டுமல்ல; வாழ்க்கையை உயர்த்தும் வழிகாட்டியாகவும் பார்க்கப்படக்கூடியது.
தன்னிலையில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்.

சுதந்திரத்துக்காக நடைபெற்ற ஓர் நீண்ட போராட்டமே நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை. தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர்.

சிறுவயதில் தொடங்கும் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு சாதாரண கிராமத்திலிருந்து எப்படி அவர் வளர்ந்தார், அடக்குமுறைகளை எதிர்த்து போராடினார், ஏன் 27 ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டார் என்பவற்றை உணர்வூட்டும் நடைமுறையில் விவரிக்கிறது.

அவரது பொறுமையும், தீர்மானமும், சகிப்புத்தன்மையும் இந்த நூலில் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் சுதந்திரத்தின் விலை என்ன என்பதை அவர் வாழ்க்கையின் மூலம் உணர்த்துகிறார்.

இந்த நூல், மக்கள் உரிமைகளுக்காக எவ்வளவு பெரிய தியாகங்களை அவர் செய்தார் என்பதையும், நாம் நமது சமூகத்திற்காக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? என்பதையும் சிந்திக்க வைக்கும்.

ஒரு யோகியின் சுயசரிதை என்பது உலகம் முழுவதும் ஆன்மிக நாட்டம் கொண்டவர்கள் மனங்களில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வாழ்க்கை வரலாறு.

இந்த நூலில் பரமஹம்ச யோகானந்தா தனது குழந்தைப் பருவம், குரு தேடல், கியான் யோகம் பயிற்சி, மற்றும் அவருடைய குரு ஸ்ரீ யுக்தேஸ்வர் அவர்களுடன் இருந்த ஆன்மீக அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரை ஆன்மிக பிரச்சாரம் மேற்கொண்ட பயணம், குருமார்களின் அற்புதங்கள், தியான அனுபவங்கள் மற்றும் யோகா சாதனையின் ஆழம் ஆகியவை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...