கோவையில் சாக்கடையில் விழுந்து வாலிபர் பலி!

கோவை: கோவையில் சாக்கடையில் மயங்கி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீளமேடு காவல் நிலையம் முன்பு கழிவுநீர் கால்வாய் ஓடுகிறது. அங்கு இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்.

அவர் திடீரென மயங்கி சாக்கடையில் விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் அங்கு வந்து மயங்கி விழுந்த வாலிபரை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் அந்த வாலிபரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு சாக்கடையில் மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வட மாநில வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

Video

Join WhatsApp