கோவை: குனியமுத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுகுணாபுரம் அருகே உள்ள மாட்டுக்கார கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி சாந்தி (வயது 48).
இவர்களது மகள் ஞானஸ்ரீ (வயது 24). ஞானஸ்ரீக்கு திருமணம் ஆகிவிட்டது பிரதீப் என்ற கணவர் உள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சி பாலக்காடு அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சாந்தியும் ஞானஸ்ரீ-ம் ஸ்கூட்டரில் சென்றனர். ஸ்கூட்டரை ஞானஸ்ரீ ஓட்டினார்.
இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் சென்றுள்ளார்.
உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் திரும்பினர். அவர்களது வாகனம் பாலக்காடு ரோட்டில்,குனியமுத்தூர் அருகே பி.கே.புதூர் பகுதியில் ஒரு மார்பிள்ஸ் கடை அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைத்திடுமாறி அருகில் உள்ள சாலை தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது.
இதில் ஞான ஸ்ரீ சாந்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும்
ஹெல்மெட் அணிந்திருந்தும் ஞானஸ்ரீக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சாந்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்தில் கல்லூரி மாணவி காலில் காயம் ஏற்பட்டது.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து மேற்கு புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




