கோவை வந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசிய நடிகை மீனா… வீடியோ!

கோவை: தனியார் மருத்துவமனை திறப்பு விழாவுக்காக கோவை வந்த நடிகை மீனா, கோவை குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் தனியார் கண் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை மீனா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் கோவை வந்து பல ஆண்டுகளாகிவிட்டது. முதலில் அடிக்கடி கோவை வருவேன். வரும் போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா வாங்கிச்செல்வேன். எனக்கு மிகவும் பிடிக்கும். நண்பர்களுக்கு வாங்கிச் சென்று கொடுப்பேன்.

மேலும், கீர்த்திலால்ஸ், மஹாவீர்ஸ் கடைகளுக்கும் அவ்வப்போது செல்வேன். கோவையின் தமிழை மறக்க முடியாது. அன்று பார்த்த கோவையா இது என்ற அளவுக்கு கோவை நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.

கோவையில் இருந்து நிறையபேர் வந்து சென்னையில் பெரிய நடிகராகியுள்ளனர். கண் பராமரிப்பு மிகவும் முக்கியம். அதனை பாதுகாக்கும் வழிகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு நடிகை மீனா பேசினார்.

Recent News

Latest Articles