பொங்கல் முடிந்து நாடே வியக்கும் கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

கோவை: எங்கள் திருப்பு முனை எப்படி அமைந்திருக்கிறது என நாடே வியக்கும் வகையில் இருக்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம்
SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார், அதுவே பொருத்தமானதாக இருக்கும் என்றார்.

மேலும் ஈரோடு பொதுகூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒரு கருத்தை கூறி வருகின்றனர், என்றும் தவளும் குழந்தைதான் பெரியவர் ஆவார்கள், பெரியவர்கள் ஆன பிறகு தான் தன்னுடைய தன்னாட்சி நடத்துவார்கள் என தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் களத்தில் இல்லாத கட்சி என தமிழிசை தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அது அவருடைய கருத்து,களத்தில் இருக்கின்றோமா? இல்லையா? என்பது தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும் என்றார். தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த பொது கூட்டம் எப்போது எங்கே என்ற கேள்விக்கு , இன்று மாலை அவரிடம் பேசிவிட்டு எந்த இடம் என்பதை முடிவு செய்வோம் என தெரிவித்தார்.

எங்களைப் பொறுத்த வரையில் பொங்கல் முடிந்த பிறகு , எங்கள் திருப்பு முனை எப்படி அமைந்திருக்கிறது என நாடே வியக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்தார்.

Recent News

போத்தனூர் பகுதியில் புதிய டயாலிசிஸ் மையம்…

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் 98.70 லட்சம் மதிப்பில் புதிய டயாலிசிஸ் மையம் அமைய உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 இலட்சம் மதிப்பீட்டில்...

Video

Join WhatsApp