Aphelion Phenomenon: சமூக வலைதளங்களில் தற்போது ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகிறது. இது குறித்த News Clouds Coimbatore Fact Check
Aphelion Phenomenon என்ற நிகழ்வு இன்று முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், இதனால் கடும் குளிர், மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படும் என்றும், பூமி சூரியனில் இருந்து இயல்பை விட 66% கூடுதல் தூரத்தில் இருப்பதாகவும் ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகிறது.
NCC Fact Check

இது முற்றிலும் தவறான ஒன்று. அஃபெலியன் நிகழ்வு (Aphelion Phenomenon) வழக்கமான ஒரு வருடாந்திர நிகழ்வு என்றாலும், அது தற்போது அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டு, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு சயின்ஸ் மூவ்மெண்ட் விளக்கம் அளித்துள்ளது. அஃபெலியன் (Aphelion) எனப்படும் இயல்பான வானியல் நிகழ்வாகும். ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் பூமி சூரியனிலிருந்து சுமார் 152 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்.
இது வழக்கமான தொலைவை விட விட வெறும் 3.3% மட்டுமே அதிகம். இந்த காலகட்டத்தில் இயல்பை விட குளிர் இருக்கும். ஆனால், 66% அதிக தொலைவு என்பதும், கடும் குளிர் நிலவும் என்பது முற்றிலும் தவறானது என்று தெரிவித்தனர்.
அஃபெலியன் என்பது ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இயல்பான விண்வெளி நிகழ்வு மட்டுமே. இதனால் உடல்நல பாதிப்போ, காலநிலை சீர்குலைவோ ஏற்படாது என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடருங்கள்.
இந்த நிகழ்வு குறித்து பல்வேறு தரப்பினரிடம் வதந்தி பரவி வரும் நிலையில், இச்செய்தியை பகிர்ந்து அவர்கள் அச்சத்தை போக்க உதவிடுங்கள் வாசகர்களே!