Header Top Ad
Header Top Ad

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இந்த ஆண்டிற்கான இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை ஒரே விண்ணப்பம் வழியாக நடைபெற உள்ளது…

இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் (TNAU) வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் (AU) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண்பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்த வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 6921 (அரசாங்க கல்லூரிகளுக்கு 2516 இடங்களும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு 4405 இடங்களும் = 6921 இடங்கள்) மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் 340 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

Advertisement

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 09.05.2025 முதல் இணையதள வாயிலாக http://tnau.ucanapply.com மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்று வருகிறது. பூர்த்தி செய்த இந்த ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு 08.06.2025 இறுதி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் மின்னஞ்சல் (email): ugadmissions@tnau.ac.in வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு)
அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9865703537 மற்றும் 9442029913 என்ற அலைபேசி எண்களிலும், மின்னஞ்சல் (email): agridean2015@gmail.com மூலமாகவும் வார நாட்களில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News