அசாம் கொள்ளையன் கோவையில் கைது- கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் வெளியானது

கோவை: கோவையில், ஜன்னல் அறுத்து நகைக் கடையில் திருட முயன்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை, பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் கடந்த 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பின்புற ஜன்னலை அறுத்து உள்ளே புகுந்து லாக்கரை உடைத்து சுமார் ரூபாய் ஐந்து கோடி மதிப்பு உள்ள நகைகளை திருட முயற்சி நடந்து இருந்தது. இதுகுறித்து நகைக் கடை உரிமையாளர் பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் அந்த பகுதியில் இருந்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய புலன் விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மீதும் நமதாஸ் என்பது தெரிய வந்தது.

இதை அடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின்படி, துணையானவர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை பிடிக்க அசாம் மாநிலத்திற்குச் சென்றனர். பின்னர் அங்கு பதுங்கி இருந்த மீதும் நமதாஸ் மடக்கி பிடித்த காவல் துறையினர் அவரிடம் இருந்து கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றி, கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு சாதனங்கள், சி.சி.டி.வி கேமரா, அலாரம், இரவு காவலர்கள் ஏற்படுத்தி எச்சரிக்கையுடன் இருக்கவும், சந்தேகப்படும்படி நபர்கள் மற்றும் வாகனங்கள் குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் அகற்றப்படும் அரசியல் விளம்பரங்கள்!

தேர்தல் நடத்தை விதிகள் அமலானதையடுத்து கோவையில் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் இருந்த அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...