கோவையில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்- காரணம் என்ன?

கோவை: கோவையில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த போர்வெல் லாரி உரிமையாளர்கள் உதிரி பாகங்களின் விலை உயர்வால் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

நிலத்தடி நீரை பெறுவதற்காக ஆழ்குழாய் கிணறு பணிகளுக்கு ரிக் இயந்திரங்களைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அளவு கொண்ட ஆழமான துளையை நிலத்தில் தோண்டுவதற்கு முக்கியமாக பிட் எனும் உபகரணம் பயன்படுத்தபட்டு வருகின்றது.

பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டு வரும் பிட் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணிகளில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

12ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், கோவை,திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரிக் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளதால் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகள் பாதிக்கப்படும்.

இது தொடர்பாக கோயமுத்தூர் ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தேவையான பிட் மற்றும் உதிரி பாகங்களின் விலை தற்போது வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. இதனால் முன்பு செய்த போல குறிப்பிட்ட விலையில் பணிகளை செய்தால் நஷ்டம் ஏற்படும்.

எனவே ஆழ்குழாய் பணிகள் அமைக்க விலை உயர்வு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என கூறினர்.

Recent News

Video

Join WhatsApp