கோவை: நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சாலையோர கடைகளில் இறுதி நேர ஷாப்பில் களைகட்டியது.
நாளை மறுநாள் திங்கட்கிழமை தீபாவளி பண்டியானது கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
கடந்த ஒரு வார காலமாகவே விற்பனையானது அதிகளவு நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்ட விற்பனையானது கோவையில் களைகட்டியது. குறிப்பாக சாலையோர கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் அணிகலன்கள் ஆன கம்மல், வளையல், தோடு, வண்ண வண்ண பொட்டுகள், காலணிகள், ஆகியவற்றை பொதுமக்கள் அதிக அளவு வாங்கிச் சென்றனர். இதனால் டவுன்ஹால் பகுதியில் சாலையோர கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
கடந்த ஒரு வார காலமாக மதியத்திற்கு மேல் கனமழை பெய்து வந்த நிலையில் இன்று மழை இல்லாததால் அதிகப்படியான மக்கள் பொருட்களை வாங்க ஆர்வமுடன் வந்தனர். மேலும் வியாபாரிகளும் மழை இல்லாததால் வியாபாரம் நன்கு நடப்பதாக தெரிவித்தனர்.


