கேப்டன் இருந்திருந்தால் இதையே செய்திருப்பார்… கோவை ஆலோசனைக்கூட்டத்தில் தேமுதிக நிர்வாகி பேச்சு!

கோவை: தேமுதிக அமைத்துள்ள கூட்டணியை மக்கள் விரும்புவதாகவும், கேப்டன் இருந்திருந்தால் இதே கூட்டணியைத் தான் அமைத்திருப்பார் என்றும் தேமுதிக நிர்வாகி சிட்டி கே.ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

தேமுதிக.,வின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் சந்துரு, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கோவிந்தராஜ், பீளமேடு பகுதிக்கழகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாவட்டம் முழுவது அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, 26 வட்டக்கழகத்தின் சார்பில் பீளமேடு பகுதியில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வட்டக்கழகச் செயலாளர் சிட்டி கே.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சியினருடன் இணக்கமாக செல்வது மற்றும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிட்டி கே.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்தது போல், கூட்டணிக்காக எங்களால் முடிந்த அளவுக்கு கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாக செயல்பட்டு, வாக்குவங்கியை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்போம். சமீபத்தில் வழங்கப்பட்ட ரூ.5,000 நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் எதிர்க்கட்சியினர் பீதியில் உள்ளனர்.

எங்கள் கூட்டணியை மக்கள் வரவேற்கின்றனர். கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் இந்த கூட்டணியைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்.

கழகத்தின் செயலாளர் சொல்வதற்கு கட்டுப்பட்டு, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு, எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்.

இவ்வாறு 26 வட்டக்கழகச் செயலாளர் சிட்டி கே.ராமச்சந்திரன் கூறினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.