கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முந்திரி பயிர் குறித்த அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் வருடாந்திர குழுக்கூட்டம் நடைபெற்றது.
2025 அகில இந்திய முந்திரி ஆராய்ச்சி திட்டத்தின் வருடந்திர குழுக்கூட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மார்ச் 4 முதல் 6 வரை 2026 ஆம் ஆண்டு நடந்து வருகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள ஆராய்ச்சி மையங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முந்திரி ரகங்கள் மேம்பாடு குறித்து விவாதித்தனர். மேலும் முந்திரியில் பயிர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்து விவாதித்தனர். இது மட்டுமல்லாமல் முந்திரி விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் தொடக்க விழாவில், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர், முனைவர் கே. வெங்கடேசன் வரவேற்புரை வழங்கினார். முந்திரி திட்ட ஒருங்கிணைப்பாளரின் அறிக்கையை, முனைவர் ஜெ.தினகர அடிகா வழங்கினார். அதில் இந்தியாவின் 14 மையங்களிலிருந்தும் கரிம மேலாண்மை நீர்பாசன மேலாண்மை பழ பயிர்களுடன் முந்திரி ஊடுபயிர் சாகுபடி. ஊட்டச்சத்து மேலாண்மை, அடர் நடவு முறை பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு மற்றும் காலநிலை மீள்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் குறித்து எடுத்துரைத்தார்.
2025 ம் ஆண்டில் இந்தியா முழுவதும் முந்திரி விவசாயிகளுக்கு சுமார் 4.1 இலட்சம் முந்திரி ஒட்டுக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது மற்றும் 5000 விவசாயிகளுக்கு 90 மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முந்திரி பயிற்சிகள் வழங்கப்பட்டது.
வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் தமிழ்நாடு துணைவேந்தர் முனைவர்.கே.சுப்பிரமணியன் வழங்கிய தலைமை உரையில், வேர் மற்றும் தண்டு அடர்த்தி விகிதம். தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைகளுக்கு மாற்றாக இயந்திரமயமாக்குதல் மற்றும் தேயிலை கொசு பூச்சி, மற்றும் முந்திரி தண்டு மற்றும் வேர்
துளைப்பான் சேதாரத்தை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
AICRP முந்திரி திட்டத்தின் கீழ் சுமார் 1356 முந்திரி மரபணு வளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் 63 முந்திரி இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளனதமிழ்நாட்டில் AICRP முந்திரி ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக விருத்தாச்சலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 4 முந்திரி இரகங்கள் மற்றும் 1 முந்திரி வீரிய ஒட்டுரகம் வெளியிடப்பட்டுள்ளன.
முனைவர் சஞ்சய் குமார் சிங் இந்திய காலநிலை மாற்றத்தின் காரணமாக சமீப காலங்களில் ஏற்படும் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக முந்திரியில் தேயிலை கொசு பூச்சி தாக்கம் மற்றும் இலை நோய் பரவல் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.முந்திரி மரங்களில் அடர் நடவு முறையை கடைப்பிடித்து ஊடுபயிராக பழப்பயிர் (பப்பாளி) பயறு வகை பயிர்கள், வாசனை முலிகை மற்றும் நறுமண பயிர்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் முந்திரி தோட்டங்களில் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார். பெரிய அளவிலான முந்திரி தோட்டங்களில் மண் சத்துக்களை தகுந்த நேரங்களில் வழங்கி உயிர் உரங்கள் மற்றும் பிற உயிரியல் உள்ளீடுகளை ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் வழிகளை ஆராய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
இறுதியாக முந்திரி வளர்ப்பு குழுமங்களில் சுற்றுச்சூழல் பொருளாதாரக் கோட்பாட்டை பின்பற்றி இயற்கை மற்றும் கரிம விவசாய முறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இத்தொடக்க விழாவில் விருத்தாசலம், வெங்குர்லா, மடக்கத்தரா, ஜார்கிராம், ஜக்தால்பூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய முந்திரி ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து முந்திரி தொடர்பான 15 தொழில்நுட்பம் சார்ந்த பதிவேடுகளை வெளியிட்டனர்.
இந்த கூட்டம் முந்திரி உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகள் இயற்கை மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகளை பாதுகாத்து பூச்சி மற்றும் நோய் தாக்கத்தின் அளவை குறைப்பது. மாற்று தாவரங்களை அடையாளம் காணுவது. முந்திரி சாகுபடிக்கு புதிய பகுதிகளை விரிவுப்படுத்தி ஏற்றுமதியை ஊக்குவிப்பது. மேம்பட்ட செயலாக்க திறன்களின் தொழில்நுட்பத்தை உருவாக்குதில் முக்கியத்துவம் கொண்டு நடத்தப்பட்டது.



