கோவை: கோவையில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு; தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சரவணம்பட்டி அருகே உள்ள ஓ.எச்.எம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மருதாசலம். இவரது மனைவி சுதா லட்சுமி (வயது 48 ). இவர் நேற்று முன்தினம் மாலையில் கணபதி அத்திப்பாளையம் ரோடு ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் நடந்து சென்ற சுதா லட்சுமியின் கழுத்தில் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாலட்சுமி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.