சித்திரைக்கனி: கோவையில் குவிந்த முக்கனிகள்… விலை என்ன?

கோவை: தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைக்கனியை முன்னிட்டு கோவையில் முக்கனிகள் விற்பனைக்குக் குவிந்துள்ளன.

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைக்கனி பண்டிகைகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளன. வழக்கமாக இந்த நாளில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை சூரியன் உள்ளிட்ட ஐம்பூதங்களுக்குப் படைத்து வழிபடுவது தமிழர்கள் மரபு.

இதனிடையே, கோவையில் பழங்கள் வரத்து ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. செங்கோட்டை, பண்ருட்டி புதுக்கோட்டை மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலாப்பழங்கள் விற்பனைக்குக் குவிந்து வருகின்றன.

உக்கடம் பழ மார்க்கெட்டில் ஒரு கிலோ பலாப்பழம் (உரிக்காதது) ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. உரித்த பலாப்பழம் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது.

இதேபோல், கோவை தடாகம் சாலையில் உள்ள பழ மண்டியில்
வாழைப்பழங்களும் குவிந்துள்ளன.

செவ்வாழை ஒரு கிலோ ரூ.60க்கும், பூவன் ரூ.40க்கும், ரஸ்தாளி ரூ.45க்கும், நேந்திரம் ரூ.55க்கும், கேரளா ரஸ்தாளி ரூ.60க்கும், கர்ப்பூரவள்ளி ரூ.30க்கும் விற்பனையாகிறது.

மாம்பழம் கிலோ ரூ.100 முதல் விற்பனையாகிறது. பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரக மாம்பழங்கள் கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இத்துடன் கோவை உழவர் சந்தை விலை அடிப்படையிலான காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

Recent News

Latest Articles