காங்கிரஸ் நிர்வாகி தலைமையில் கோவையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கோவை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கோவையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆந்திர பிரதேசத்தின் பொறுப்பாளருமான டென்ஸ்டன் ராஜா தலைமையில் சர்ச் ஆப் கிரேட் காட் சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு, விருந்து பறிமாறப்பட்டது.

விழாவில் சர்ச் ஆப் கிரேட் காடின் போதகர் வேதவழி கவிஞர் ஸ்டீப்பன் ஸ்ரீதரன் மற்றும் மலர் செல்வி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக திமுகவை சார்ந்த மூத்த வழக்கறிஞர் கணேஷ்குமார் மற்றும் திமுக மூத்த நிர்வாகி தாராஷபி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை ஒருங்கிணைப்பாளர் துரை அருள்தாஸ் மற்றும் நான்சி மார்கரெட்,

பிரேம் குமார், சுரேஷ்பாபு, மெரின் சுரேஷ் கலந்து கொண்டனர். மேலும், சர்ச் ஆப் கிரேட் காடின் முக்கியஸ்தர்கள் டெய்சி, புஷ்பா, டெரிக், அருண்குமார், ஹெலன், அருண், பி.ஆர்.ஜான், தங்கராஜ், அமுதா,

சர்மிளா, ஹெலனா, நிம்ரா, ஜோஷ், மனோஜ்குமார், ஹெப்சிபா, விஜயா, டோனி, டேனியல், மேரி, கிளாரா மற்றும் பலர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பித்தனர்.

Recent News

Video

Join WhatsApp