Coimbatore Accident Today: தவறான ஓவர்டேக்… கோவையில் அதிர்ச்சி விபத்து – பரபரப்பு வீடியோ காட்சி

Coimbatore Accident Today: எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் லாரியை முந்த முயன்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையான கோவை சிந்தாமணிபுதூர் எல்என்டி பைபாஸ் சாலையில் இன்று காலை இருசக்கர வாகனம் ஒன்று சென்றது. அந்த இருசக்கர வாகன ஓட்டி முன்னே சென்றுகொண்டிருந்த லாரியை முந்த முயன்றார்.

அப்போது லாரியின் இடதுபுறமாக முந்த முயன்றபோது, வாகனத்தின் ஹேண்டில்பார், லாரியின் பக்கவாட்டு கம்பியில் மோதியது. அதிவேகமாகச் சென்ற வாகனம் இந்த மோதலால் நிலைகுலைந்தது. தொடர்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் மற்றும் நெடுஞ்சாலை கல்லில் மோதி விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். இதனிடையே இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.