கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்- வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு…

கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த நவம்பர் மாதம் விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

அச்சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், காளீஸ்வரன், குணா ஆகிய மூன்று பேர் போலீசாரால் சுட்டு பிடிக்கபட்டனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி சுந்தரராஜன் விசாரித்து வருகிறார்.

மூன்று பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டு மூவரிடம் அதன் நகல் தரப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மூன்று பேரும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை 9ம் தேதிக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மூவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Recent News

Video

Join WhatsApp