கோவை: கோவையில் விமர்சையாக சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
கோயமுத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், சிறப்பான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (திட்டம் 4), சிங்காநல்லூர் பகுதி அதிகாரி டாக்டர் என்.எஸ். சந்தியா தலைமையேற்று, 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து, பட்டுப் புடவை வழங்கி, முகத்தில் சந்தனம் பூசி பாரம்பரிய முறையில் ஆசீர்வதிக்கப்பட்டது. மேலும், கும்மியடித்து அவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வித்தனர். விழாவின் நிறைவாக, நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகையான சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.
இந்த சமுதாய வளைகாப்பு விழா, தாய்மார்களின் ஆரோக்கியத்தையும் மனநலத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.

