கோவை: கோவை மாநகராட்சியில் 58.87 லட்சம் மதிப்பிலான 3 புதிய பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் 58.87 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 எண்ணிக்கையிலான பணிகளை திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.58.87 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற எண்ணிக்கையிலான பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், முன்னிலையில் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
அதன்படி கணபதி, காந்தி நகர் பிரதான சாலை, கணபதி கார்டன் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.20.60 இலட்சம் மதிப்பீட்டில் ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட சிறுபாலத்தினையும், வார்டு எண்.29-க்குட்பட்ட மருதையா நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.29,00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி சிறுவர் பூங்காவையும் மற்றும் வி.என்.எஸ்.நகர் பகுதியில் மண்டலநிதியிலிருந்து ரூ.9.27 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி சிறுவர் பூங்காவையும் திறந்து வைத்தார்.

