கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுக் கோப்பையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் வழங்கி பாராட்டினார்.
கோவை மாநகராட்சி பள்ளி, மத்திய மண்டலம் வார்டு எண்.33-க்குட்பட்ட நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுக் கோப்பையினை மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் வழங்கி பாராட்டினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள். 10 உயர்நிலைப் பள்ளிகள் 37 நடுநிலைப் பள்ளிகள், 83 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 1 சிறப்பு பள்ளி என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக விளையாட்டுத்துறையில் பள்ளி மாணவ மாணவியர்கள் சிறந்து விளங்கும் வகையில் விளையாட்டிற்கு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு மாநகராட்சிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த 28.01.2026 முதல் இன்று 09.02.2026 வரை வாலிபால்கபடி, கிரிக்கெட் இறகுப்பந்து, கேரம், செஸ், சிலம்பம், களரி கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ மற்றும் தடகளம் உள்ளிட்டபல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் 64 பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

